Enable Javscript for better performance
கம்பம் ஆற்றில் விடும் விழா: மே 30-இல் உள்ளூர் விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாரியம்மன் கோயில் வைகாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதால் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
    கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருவிழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. 
    வரும் ஜூன் 10 ஆம் தேதி வரை விழா நடைபெற உள்ளது.  விழாவின் முக்கிய  நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி(புதன்கிழமை)நடைபெற உள்ளது. 
    எனவே அன்றைய தினம் மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப்படுகிறது.
    இந்த உள்ளூர் விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை. ஆதலால் இந்த விடுமுறை நாளுக்குப் பதிலாக ஜூன்  2 ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai