Enable Javscript for better performance
கரூரில் வங்கி தொழிற்சங்கங்களின்கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூரில் வங்கித்தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    கரூர் கோவைச் சாலையில் உள்ள கனரா வங்கி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் நரசிம்மன் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஐ. வெங்கடேசன், தேசிய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், இருதரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும், வராக்கடன்களை காரணம் காட்டி ஊதிய உயர்வை மறுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், கரூரில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் திரளாகப் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai