Enable Javscript for better performance
நத்தமேடு பாதகாளியம்மன்அம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள நத்தமேடு பாதகாளியம்மன் அம்மன் கோயில் திருவிழாவில் வியாழக்கிழமை பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
    கரூர் - கொடுமுடி நெடுஞ்சாலையில் கரூர் ஒன்றியம் வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் பாதகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு புதன்கிழமை தொடங்கியது. தொடர்ந்து வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாதகாளியம்மன் கோயிலில் இருந்து கொடுமுடிக்கு பக்தர்கள் சென்று, அங்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து பாதகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.  இதையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.  பிறகு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai