Enable Javscript for better performance
பிளஸ்-2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ்-2 தேர்வுக்கு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
    இத்தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
    இதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் பள்ளி மற்றும் தேர்வு மையத்திற்குச் சென்று வியாழக்கிழமை( மே 17) முதல் வரும் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21 ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai