Enable Javscript for better performance
பூ ரத ஊர்வலத்தில்பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாரியம்மன் கோயில் பூ ரத ஊர்வலத்தில் பங்கேற்க நகரத்தாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் கருவூர் நகரத்தார் சங்கச் செயலாளர் மேலை.பழநியப்பன். 
    கருவூர் நகரத்தார் நற்பணி மன்றம் சார்பில் சன்னதி தெருவில் அமைந்துள்ள சங்கக் கட்டடத்தில் இருந்து சிறப்பு அலங்கார வாகனத்தில் வெள்ளிக்கிழமை (மே 18) இரவு 7 மணிக்கு மேள வாத்ய இசை முழங்க ஊர்வலமாகப் புறப்பட்டு மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் நடக்கிறது. முன்னதாக மழை வேண்டி பதிகம் கூட்டு வழிபாடு, நமசிவாய மந்திர கூட்டு வழிபாடும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai