Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகள்  குறைகேட்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம் வட்டத்தினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    முகாமிற்கு, கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 24 மனுக்களும், மூன்று சக்கர சைக்கிள், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் கேட்டு 12 மனுக்கள் என மொத்தம் 36 மனுக்கள் பெறப்பட்டன.
    முகாமில், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பழனி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் வட்டாட்சியர்கள் செந்தில், பாலசுந்தரம், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai