Enable Javscript for better performance
30 % மானியத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனம் பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    கரூர் மாவட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி சாதனம் பெறுவோருக்கு 30% மானியம் வழங்கப்படுகிறது என்றார் ஆட்சியர் த. அன்பழகன்.
       கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
    தமிழகத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 1 கிலோ வாட் முதல் 500 கிலோ வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனம் அமைத்துக் கொள்ளலாம். 1 கிலோ வாட் திறனுள்ள சூரிய ஒளி மின்சார அமைப்பின் மூலம் தினசரி 4 யூனிட் முதல் 4.5 யூனிட் வரை மின் உற்பத்தி செய்யலாம்.  மின்சாரம் உற்பத்தி அமைப்பின் விலை ரூ.60,000. இதில், மத்திய அரசு 30 சதவிகிதம் ரூ.18,000 மானியம் வழங்குகிறது.
    சூரிய ஒளி மின்சார அமைப்பின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பயன்பாட்டுப்போக மீதமுள்ள மின்சார யூனிட்கள் மின் வாரியத்திற்கு அனுப்பப்படுவதால் மின் கட்டணம் செலுத்துவது குறையும். பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. மேலும், விவரங்களுக்கு,  77080 64710, 77080 64635 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, உதவி பொறியாளர் (தமிழ்நாடு எரிசக்தி முகமை) செந்தில், தனியார் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai