குறைதீர் முகாம்: மக்களவை துணை தலைவர் பங்கேற்பு
By DIN | Published on : 01st September 2018 03:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கரூர் ஒன்றிய பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாகஸ்கர் ஆகியோர் பெற்றனர்.
நன்னியூர் ஊராட்சிக்குள்பட்ட அண்ணாநகர், வடுகர் தெரு, பகவதி நகர், துவராபாளையம் காலனி, நஞ்சை புகழூர் ஊராட்சிக்குள்பட்ட கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்தார். மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.