கேரளத்துக்கு ரூ.4.5 லட்சத்தில் நிவாரணப் பொருட்கள்

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேரளத்துக்கு ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள துணிகள், அரிசி மற்றும் பலசரக்கு

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேரளத்துக்கு ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள துணிகள், அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள், மருந்துகள், உணவுப்பொருட்கள், எழுதுப்பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டநிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ். நம்பிராஜன் தலைமை வகித்து, பொருட்களை அனுப்பி வைத்தார். 
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் பி. தங்கவேல், கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ். சசிகலா, நீதிபதிகள் பிருந்தாகேசவசாரி, பி. பார்த்தசாரதி, இந்திராணி, ஜெயப்பிரகாஷ், பி. மோகனவள்ளி, ரகோத்தமன் மற்றும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com