"கிராமங்களிலும் தூய்மை இயக்கம் வெல்ல வேண்டும்'

கிராமங்களிலும் தூய்மை இயக்கம் வெற்றி பெற்றால் மட்டுமே நாடு சுகாதாரத்தில் முன்னேற முடியும் என்றார் தூய்மை இந்தியா இயக்க திருச்சி கள விளம்பர அலுவலர் கே. தேவிபத்மநாபன். 

கிராமங்களிலும் தூய்மை இயக்கம் வெற்றி பெற்றால் மட்டுமே நாடு சுகாதாரத்தில் முன்னேற முடியும் என்றார் தூய்மை இந்தியா இயக்க திருச்சி கள விளம்பர அலுவலர் கே. தேவிபத்மநாபன். 
மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் திருச்சி கள விழிப்புணர்வு அலுவலகம் சார்பில் தோகைமலையில் புதன்கிழமை நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
அடுத்தாண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத நாடாக இந்தியாவை மாற்ற தூய்மை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்கள் மட்டுமின்றி தோகைமலை போன்ற கிராமங்களிலும் தூய்மை இயக்கம் வெற்றிபெற்றால் மட்டுமே நாடு சுகாதாரத்தில் முன்னேற முடியும். 
தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்காக அரசு 12,000 ரூபாய் வழங்கி வருகிறது,  மக்கள் இதனை சரியாக பயன்பெடுத்தி திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நிலை ஏற்படுத்த வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு ஏற்ப நோய் தடுப்புக்கு தூய்மை மிகவும் அவசியம். தனிநபர் தூய்மை, வீடுகளின்  தூய்மை,  சுற்றுப்புற தூய்மை, கிராமங்களின் தூய்மை என தூய்மையை பேணி காக்க வேண்டும். திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அகற்றுவது, திடக்கழிவு மேலாண்மை, தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தனிநபர் கழிப்பிடங்கள் கட்டுவது போன்ற நோக்கங்களுடன் தூய்மை இந்தியா செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டமெல்லாம் மக்கள் இயக்கமாக மாறிவிட்டால் மட்டுமே தூய்மை இந்தியா இயக்கம் வெற்றிபெற முடியும் என்றார்.  
நிகழ்ச்சியில் தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, கிருஷ்ணமூர்த்தி, கள விளம்பர உதவியாளர் கே. ரவீந்திரன், தோகைமலை அரசு மருத்துவ அலுவலர் தாரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி,  மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக தோகைமலையில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com