சுடச்சுட

  

  கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு கொண்டாட்ட சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
  ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் அன்று முதல் 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலம் கடைப்பிடிப்பார்கள். இந்நாட்களில் இறைவனை பற்றிய சிந்தனையில் மூழ்கி, ஒவ்வொரு நாளும் ஒருவேளையாவது உண்ணா நோன்பு இருப்பது வழக்கம். 40 நாட்களுக்கு முன்பு வரும் வாரத்தின் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி என்றும், அன்று இயேசு சிலுவையில் அறையப்படுவதை தியானித்தும், பின்னர் அவர் மூன்று நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுதலை ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடுகிறார்கள். 
  நிகழாண்டிற்கான தவக்காலம் மார்ச் 6 ஆம் தேதி சாம்பல் புதனுடன் துவங்கியது. இதையடுத்து இயேசு சிலுவையில் அறையப்படும் முன் ஒரு வாரத்திற்கு முன்னதாக யூதர்கள் குடும்பத்தில் தலைமகன்கள் பங்கேற்கும் விழாவில் அவர் பங்கேற்கச் செல்லும்போது குருடர்களுக்கு பார்வை கொடுப்பது போன்ற புதுமைகளை அவர் செய்வதைக் கண்ட மற்ற யூதர்கள், இவர்தான் நம்மை மீட்க வந்த ரட்சகர் எனக்கூறி அவரை கழுதையில் ஏற்றி குருத்தோலையுடன் ஊர்வலமாக ஓசான்னா, ஓசான்னா, தாவீதின் மகனுக்கு ஓசான்னா என அழைத்துச் செல்வார்கள். இந்நிகழ்ச்சியை நினைவுக்கூரும் வகையில் ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறு தினமாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக தென்னங் குருத்தோலையுடன் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
  கரூர் புனித தெரசாள் ஆலயத்தில் ஆலய பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக கோயில் அருகே உள்ள பள்ளி மைதானத்திற்குள் ஊர்வலமாக வந்தனர். 
  பின்னர் நடைபெற்ற இறைவழிபாட்டில் திரளாகப் பங்கேற்றனர். வரும் வெள்ளிக்கிழமை புனிதவெள்ளியாகவும், ஞாயிறு ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்பட உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai