சுடச்சுட

  

  கரூர் மாவட்டம், க. பரமத்தி தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 
  கரூர் மாவட்டம் க.பரமத்தி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செல்லாண்டிபாளையம், பள்ளப்பாளையம், ஆரியூர், நடந்தை, தென்னிலை, கோடந்தூர், புதுப்பாளையம், காட்டாம்புதூர், அகிலாண்டபுரம், தொக்குபட்டி, நஞ்சை காளிகுறிச்சி, ஏலவனூர், எல்லைமேடு, காசிபாளையம், ஐந்து ரோடு, தும்பிவாடி உள்ளிட்ட  பகுதிகளில் திங்கள்கிழமை பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை மேலும் பேசியது: 
             ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது காவிரி நீருக்காக போராடினார். கர்நாடகாவில் மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராது. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி, மத்தியில் மோடி ஆட்சி. இப்படி நடந்துகொண்டிருக்கும்போது காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் கைக்கழுவக் கூட தண்ணீர் கிடைக்காது. மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம், தமிழகத்திற்கு தண்ணீர் தரமாட்டோம் என கர்நாடகா கூறினால் இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் எதுவும் செய்ய முடியாது என்றார்.
  முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது:  அரவக்குறிச்சி தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்துள்ளோம். இப்போது கூட ரூ.220 கோடியில் காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் முடிந்தவுடன் இப்பணிகள் அனைத்தும் முடிந்துவிடும்.  
  இதைத்தவிர புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.490 கோடியில் கதவணை கட்டப்பட உள்ளது. இன்னும் எண்ணற்ற நலத்திட்டங்கள் கிடைத்திட அதிமுகவேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.
  பிரசாரத்தின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுகவினர் திரளாகப் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai