இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு:  தொகுதியில் இருந்து அந்நியர்கள் வெளியேற வேண்டும்

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைவதால், தொகுதிக்கு வெளியில் இருந்து

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை முடிவடைவதால், தொகுதிக்கு வெளியில் இருந்து வந்த அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக் கூடாது, தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான த.அன்பழகன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பிரசாரம் செவ்வாய்க்கிழமை ( ஏப். 16) மாலை 6 மணியுடன் முடிவடைவதால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல்  நடத்தை விதிகளின் படி கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 
தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களை நடத்தவோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவோ  கூடாது.  மேலும், தேர்தல் தொடர்பான தகவல்களை ஒளிப்பதிவிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது எவ்வித மின்னணு தகவல் தொடர்பு முறையிலோ காட்சிப்படுத்தக்கூடாது. இசை நிகழ்ச்சிகள் அல்லது எவ்வித பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் 2 வருட சிறை தண்டனை, அபராதம் அல்லது  இரண்டுமோ விதிக்கப்படும்.
 தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட, அத்தொகுதியில் வாக்காளராக இல்லாத அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை ( ஏப்.16)மாலை 6 மணிக்கு மேல் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். 
மாலை 6 மணிக்கு மேல் இயக்கப்படும் அனுமதி வழங்கப்பட்ட  வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126(1)(பி) -ன் படி தேர்தல்                  தொடர்பான கருத்துக் கணிப்புகளோ, வாக்கெடுப்புகளோ, கணக்கெடுப்புகளோ தேர்தல்  நாளுக்கு  48 மணிநேரத்திற்கு முன்பாக வெளியிடத்  தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com