துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு

மக்கள் பயமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள துணை ராணுவப் படையினரின்

மக்கள் பயமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு கரூரில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
நடைபெறவுள்ள மக்களவைத்பொதுத்தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவப் படையினர் கரூருக்கு வருகை புரிந்துள்ளனர். மக்கள் பயமின்றி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் அவர்களின் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை காலை கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. 
கொடி அணிவகுப்பை தேர்தல் பொது பார்வையாளர் பிரசாந்த் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் டி.கே. ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் கொடியசைத்து தொடக்கி வைத்து அணிவகுப்பில் கலந்து கொண்டார். வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கொடி அணிவகுப்பு ஊர்வலம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் துவங்கி,  ஜவகர் கடைவீதி, மாரியம்மன் கோயில் தேர்வீதி, காமராஜ் மார்கெட், போலீஸ் லைன் வழியாக கரூர் நகர காவல் நிலையம் வரை நடைபெற்றது. தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டியிலும் முக்கிய வீதிகள் வழியாக துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கரூர் மக்களவைத்தொகுதிக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், பெரம்பலூர் மக்களவைத்தொகுதிக்குட்பட்ட குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 69 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப் படையினர் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ளனர். 
இதில் ஒரு துணை கமாண்டோ வீரர், ஒரு ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் 77 காவலர்கள் உட்பட 85 துணை ராணுவப் படையினர் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com