சுடச்சுட

  

  படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு மேற்கொள்வது அவசியம்: வேளாண் துறையினர் அறிவுரை

  By DIN  |   Published on : 17th April 2019 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை வட்டாரத்தில் மக்காச்சோளம் மற்றும் கரும்பு பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் படைப்புழுவை கோடை உழவின் மூலம் கட்டுப்படுத்தலாம் என கபிலர்மலை வேளாண் உதவி இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.
  இதுகுறித்து கபிலர்மலை வட்டார வேளாண் உதவி இயக்குநர் கோவிந்தசாமி செய்திக் குறிப்பில் கூறியது: கபிலர்மலை வட்டாரத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலால் பயிர் வளர்ச்சி அதிகமாக பாதிக்கப்படுகிறது. இப்புழு மக்காச்சோளம் மட்டுமின்றி கரும்பு உள்ளிட்ட பயிர்களை தாக்கி பாதிப்பு ஏற்படுத்துகிறது. இப்புழுவின் வாழ்நாள்  30 முதல் 40 நாள்களாகும்.
  இளம் புழுக்கள் அதிகமாக இலைகளின் அடிப்பகுதியை தின்று சேதத்தை விளைவிக்கும். இதனால் இலைகளில் பச்சையம் இல்லாமல் வெண்மையாக காணப்படும். மூன்று முதல் ஆறாம் நிலை புழுக்கள் இலையுறையுனுள் சென்று இலையை உண்டு சேதம் ஏற்படுத்தும். 20 முதல் 40 நாள்களுடைய பயிரை அதிகமாக தாக்குகிறது. இந்த படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு மேற்கொள்வது மிகவும் அவசியம்.
  இதன் மூலம் புழுக்கள் அனைத்தும் மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இத்தகைய படைப் புழுக்களை பறவைகள் இரையாக உள்கொள்வதால் இயற்கையான முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், களைகள் இல்லாமல் வயலை தூய்மையாக வைத்திருக்க கோடை உழவு செய்தல் வெண்டும். ஏனெனில், களைகள், பூஞ்சாண் விதைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைக் கூடுகள் அனைத்தும் கோடை உழவு செய்வதன் மூலமாக அழிக்கப்படுகின்றன.
  மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதாலும், மண்ணை புழுதிபட உழுவதாலும் மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது மற்றும் மண்ணின் இறுக்கத்தன்மை குறைந்து மீண்டும் பயிரிடுவதற்கு ஏதுவான நிலமாக மாறுபடுகிறது. இதன் மூலம் கோடை மழையை வேகமாக உறிஞ்சும் தன்மை நிலத்தில் அதிகரிக்கிறது. 
  வயலில் அடியுரமாக 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதனால் கூட்டுப் புழுவில் இருந்து அந்துப் புச்சிகள் வெளிவருவது கட்டுப்படுத்தலாம். எனவே, கோடை உழவு செய்தல் அவசியம் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai