சுடச்சுட

  

  வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: இருசக்கர வாகனம் பறிமுதல்

  By DIN  |   Published on : 17th April 2019 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஜேடர்பாளையத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க வாக்குச் சீட்டுகளுடன் வந்தவர் தப்பியோடியதையடுத்து, அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
  பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், வாகனத்தினுள் பணம் மற்றும் வாக்குச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். 
  இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, ஜேடர்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai