காமராஜரோடு கை சின்னத்தின் கதை முடிந்து விட்டது: அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை

காமராஜரோடு கை சின்னத்தின் கதை முடிந்து விட்டது என்றார் அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை.


காமராஜரோடு கை சின்னத்தின் கதை முடிந்து விட்டது என்றார் அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை.
கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு. தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இறுதிப் பிரசாரத்தை  கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர், அண்ணா சிலைக்கு முன் தொடங்கினர். முன்னதாக எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து ஊர்வலமாக சர்ச் கார்னர், ஜவஹர்பஜார், சின்னஆண்டாங்கோயில், பெரியார்வளைவு, சேலம் பைபாஸ் சாலை, திருக்காம்புலியூர் ரவுண்டானா வழியாக கோவை சாலையில் உள்ள அதிமுக பணிமனைக்கு வந்தனர்.
அங்கு வேட்பாளர் மு. தம்பிதுரை பேசியது:
தமிழகத்தில்  நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி. ராகுல் காந்தி கர்நாடகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேக்கேதாட்டு அணை கட்டுவோம் என்கிறார். அவர்கள் அங்கு அணை கட்டினால் ஒரு சொட்டு நீர் கூட நமக்கு கிடைக்காது. காமராஜரோடு கை சின்னத்தின் கதை முடிந்துவிட்டது. 
மம்தாபானர்ஜி, நவீன்பட்நாயக், சந்திரசேகர்ராவ், ஜெகன்மோகன்ரெட்டி போன்ற முக்கியக் தலைவர்களின் கட்சித் தலைவர்கள் அனைவரும் ராகுல்காந்தியை தலைவராக ஏற்க முடியாது எனக் கூறிவிட்டனர். மு.க. ஸ்டாலின் மட்டும்தான் ராகுலை பிரதமர் வேட்பாளர் எனக் கூறுகிறார். 
ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்று வெற்றிபெற்று காவிரி ஆணையம் அமைத்துக் கொடுத்தார். மோடி மேக்கேதாட்டுவில்  அணை கட்ட விடமாட்டோம் எனக் கூறியுள்ளார். காவிரி நீருக்காகத்தான் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். ஒரு தாயாக இருந்து நமக்காக தமிழ்நாட்டு மக்களுக்காக, கரூர் மக்களுக்காக காவிரி நீர் வேண்டும் என்று போராடியவர் ஜெயலலிதா. 
எனவே இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக நிற்பவர் தம்பிதுரை அல்ல, ஜெயலலிதா. எனவே ஜெயலலிதாவின் இரட்டை இலைச்சின்னத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார் அவர். 
பிரசாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ  எம். கீதாமணிவண்ணன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன், சிவசாமி, நாட்ராயன், கேவி. தங்கவேல், மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏ.ஆர். காளியப்பன், பசுவைசிவசாமி, வை. நெடுஞ்செழியன், காமராஜ், கமலக்கண்ணன், வசிகே. ஜெயராஜ், செந்தில்நாதன், தானேஷ், சேரன்பழனிசாமி, பழனிராஜ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com