திமுகவினரால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்: கரூர் மாவட்ட ஆட்சியர்

திமுகவினரால் எனக்கும், எனது குடும்பத்தாரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார் கரூர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன்.


திமுகவினரால் எனக்கும், எனது குடும்பத்தாரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார் கரூர் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன்.
கரூர் மக்களவைத் தொகுதியின் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்ய ஒதுக்குமாறு கேட்ட நேரம் அதிமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால்  திமுக மாவட்ட பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி மற்றும் வேட்பாளர் செ. ஜோதிமணி ஆகியோர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், கரூர் கோட்டாட்சியருமான கு. சரவணமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முறையிட்டனர்.  அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  இதையடுத்து அவர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள 4-6 மணி எனவும், அதிமுகவினருக்கு 2-4  மணி எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதனிடையே போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆட்சியரைச் சந்தித்து நாங்கள் தான் முதலில் ஆன்லைனில் பதிவு செய்தோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்குச் சென்ற திமுகவினர் சிலர் அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த. அன்பழகன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
திங்கள்கிழமை நள்ளிரவில்  திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியின் ஆலோசனையின் பேரில் இவர்களது ஆதரவாளரான வழக்குரைஞர் செந்தில் உள்ளிட்டோர் தகராறு செய்து என்  வீட்டுக்குள் நுழைய முயன்றனர். 
அப்போது தொலைபேசியில் அவர்களைத் தொடர்புகொண்டு  உங்களுக்கு குறைகள் ஏதும் இருந்தால் காலையில் அலுவலகம் வந்து மனு கொடுங்கள். நான் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்றேன். 
இருந்தாலும் வீட்டுக்கு வந்த 100 பேர் எனக்கும், எனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் மீண்டும் உள்ளே நுழைய வந்தார்கள்.  எஸ்பி வந்துதான் என்னை மீட்டார். விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம், காவல் நிலையம், எஸ்பிக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன். தேர்தல் ஆணைய உத்தரவின்அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com