கரூர் அரசுக் கல்லூரியில் நாளை முதல் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்
By DIN | Published On : 21st April 2019 04:03 AM | Last Updated : 21st April 2019 04:03 AM | அ+அ அ- |

கரூர் அரசு கலைக் கல்லூரியில் வரும் 22ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ஆர். ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டிற்கான முதலாமாண்டு இளங்கலை, இளம் அறிவியல், வணிகவியல், நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் வரும் 22ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பத்தின் விலை ரூ.50. எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனால் சாதிச்சான்று நகல் சமர்ப்பிக்க வேண்டும்.