முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th August 2019 03:41 AM | Last Updated : 04th August 2019 03:41 AM | அ+அ அ- |

கரூரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் போலீஸார் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் நகர காவல்நிலைய போலீஸார் மற்றும் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பில் கரூரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது.
பேரணியை, கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் துவக்கி வைத்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் எப்போதும் இருக்க வேண்டும், உங்கள் குழந்தைகள் உங்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் பேசலாம் என்ற தன்னம்பிக்கையை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் குழந்தைகளை நாம்தான் நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அலங்கார் லாட்ஜ் முன் தொடங்கிய பேரணி, கோவைச்சாலை, காமராஜர் சிலை வழியாகச் சென்று மீண்டும் அலங்கார் தங்கும் விடுதி முன்பு முடிவடைந்தது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பி.மஞ்சு, கணேசன் மற்றும் போலீஸார், பொதுமக்கள் ஆகியோர் திரளாகப் பங்கேற்றனர்.