கார் மோதி இருவர் பலி
By DIN | Published On : 04th August 2019 03:41 AM | Last Updated : 04th August 2019 03:41 AM | அ+அ அ- |

கரூர் அருகே கார் மோதி சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம், அப்பிப்பாளையம் கேதம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(54). தாளப்பட்டி கொடையூரைச் சேர்ந்த கணேசன்(54). இருவரும் நண்பர்கள். இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு மதுரை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையம்பரப்பு என்ற இடத்தில் சாலையோரம் நின்றுபேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென நிலைத்தடுமாறி அவர்கள் மீது மோதியது. இதில் சுப்ரமணியும், கணேசனும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது சடலங்களையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து கார் ஓட்டுநர் சின்னதாராபுரத்தைச் சேர்ந்த முருகவேல்(49) என்பவரைத் தேடி வருகின்றனர்.