Enable Javscript for better performance
அரசு பேருந்து நடத்துநரை தாக்கியதாக இளைஞர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அரசு பேருந்து நடத்துநரை தாக்கியதாக இளைஞர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 05th August 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாதானபுரத்தில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
    கரூர் மாவட்டம், குளித்தலை அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து நடத்துநராக இருப்பவர் ரமேஷ்(38). இவர், சனிக்கிழமை கரூர் - குளித்தலை அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தார். 
    அப்போது குளித்தலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த குமரேசன்(30) போதையில் பேருந்தை நிறுத்தச் சொல்லுமாறு கூறியுள்ளார். 
    அப்போது நடத்துனர் பேருந்துநிறுத்தத்தில் நிறுத்துகிறோம் எனக்கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குமரேசன், பேருந்து நடத்துநர் ரமேஷை தாக்கியுள்ளார். 
    இதுதொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸார் குமரேசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai