மாவட்ட அளவிலான செஸ் போட்டி

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
கரூரில் ஆனந்த் செஸ் அகாடமி மற்றும் சுமதி ரத்தினம் சார்பில் கரூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓபன் செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் துவக்கி வைத்தார்.  முன்னதாக ஆனந்த் செஸ் அகாதெமி செயலாளர் விஎஸ்.சிவக்குமார் வரவேற்றார். இதில் கரூர் மாவட்ட செஸ் சங்கச் செயலாளர் வி.பி.செல்வராஜ், துணைத் தலைவர் வி.வீரப்பன், சுமதி இனிப்பகம் மற்றும் உணவகத்தின் சிவசுப்ரமணி ரத்தினம், சுமதி பி.ரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
போட்டியில், 7, 9, 11, 13 வயது வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் 7 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவி தப்ஷிகாவும், 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர் டி.ஜீவாவும், 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர் எஸ்.சிவனேஷ், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில்  மாணவிர் நிஷாந்த்நோபிள் ஆண்டனி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஓபன் பிரிவில் மாணவர் கெளதம் சுப்ரமணி முதலிடம் பிடித்தார்.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு கரூர் மாவட்ட செஸ் சங்கத் தலைவர் அட்லஸ் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் பங்கேற்று முதலிடம் பிடித்தவர்களுக்கு சைக்கிள்கள் மற்றும் கோப்பை, சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com