வள்ளுவர் கல்லூரியில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, திருவள்ளுவர் மாணவர், இளைஞர் இயக்கம் சார்பில்

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, திருவள்ளுவர் மாணவர், இளைஞர் இயக்கம் சார்பில் வள்ளுவர் கல்வி வளாகத்தில் மழை வேண்டி திருவள்ளுவரின் வான்சிறப்பு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
நாதஸ்வர இசையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் க. செங்குட்டுவன் தலைமை வகித்துப் பேசியது: 
பருவ மழை பொய்த்துள்ள இந்த காலக் கட்டத்தில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது எனக் குறிப்பிட்டார். கரூர் பரணி கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். இதில் திருவள்ளுவர் இளைஞர், மாணவர் இயக்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான  தருண் விஜய் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகையில்,   திருவள்ளுவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் மழையின் முக்கியத்துவத்தை திருக்குறள் வாயிலாக உணர்த்தியுள்ளார். உலக வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவதை ஊக்குவிக்க வேண்டும். மழைநீரை நாம் ஒவ்வொருவரும் சேகரிக்க வேண்டும். கல்விப் பணிக்கு மத்தியில் கரூர் வள்ளுவர் கல்லூரியின் சமூகப் பணிகள் பாராட்டத்தக்கது என்றார். முன்னதாக கல்லூரி முதல்வர் சாலை பற்குணன் வரவேற்றார். இந்த சிறப்பு பிரார்த்தனையில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com