சுடச்சுட

  

  மாநில திறனறிதல் போட்டியில் வென்ற கரூர் மலர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டப்பட்டனர்.
  தமிழ்நாடு காகித ஆலை சார்பில் அண்மையில் நடத்தப்பட் மாநில அளவிலான டேலண்ட் - எக்ஸ்போ என்னும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான திறனறிதல் போட்டியில் தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 
  அதில் 7-ஆம் வகுப்பு மாணவி திவ்யபாரதி கிரியேடிவ் ஸ்டோரி ரைட்டிங் போட்டியில் மூன்றாம் பரிசும், குழு நடனப் போட்டியில் பள்ளி மாணவிகள் 5-ஆம் பரிசும் பெற்றனர். 
  இவர்களுக்கான பரிசு, கேடயத்தை டி.என்.பி.எல். முதன்மை மேலாளர் சிவசண்முகராஜா வழங்கினார்.  பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த  பாராட்டு விழாவுக்கு பள்ளித் தாளாளர் பேங்க். கே. சுப்ரமணியன் தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கிப் பாராட்டினார். துணை முதல்வர் ஜெயசித்ரா, ஆசிரியைகள் ஜெயந்தி, சத்யா, அழகம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai