மயிலாடி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் ஆய்வு

குடிமராமத்து திட் டத்தில் மயிலாடி பகுதிகளில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட

குடிமராமத்து திட் டத்தில் மயிலாடி பகுதிகளில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் மழை நீரைச் சேமிக்கும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஏரி, குளம், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழித் தடங்களைத் தூர்வாரவும், கரைகளைப் பலப்படுத்தவும் குடிமராமத்து என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டுவாய்க்கால், புதுக்கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் வாய்க்காலின் கிளை வாய்க்கால்களான பள்ள வாய்க்கால், படுகை வாய்க்கால், சித்தலவாய் வாய்க்கால், தென்கரை வாய்க்காலின் கிளை வாய்க்காலான மகாதானபுரம் வாய்க்கால் ஆகியவற்றை குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரவும், கரைகளைப் பலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் கட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் அதன் கிளைவாய்க் கால்களுக்கு ரூ.1.10 கோடியில் 5 பணிகளையும், புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலை தூர்வார ரூ. 80 லட்சத்தில் 3 பணிகளையும் குடிமராமத்து செய்ய நிதி ஒதுக்கப்பட்டு, கட்டளை மேட்டுவாய்க்காலில் 22.20 கிலோ மீட்டரும், புதுகட்டளை மேட்டுவாய்க்காலில் 24 கிலோ மீட்டரும், பள்ளவாய்க்கால், படுகைவாய்க்கால், சித்தலவாய் வாய்க்கால், மற்றும்  மகாதானபுரம் வாய்க்கால் முழுவதும் தூர்வாரப்படுகிறது.
மேலும் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மாயனூர் தடுப்பணையின் வலதுபுறம் உள்ள தென்கரை கால்வாய், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால் மற்றும் புதுகட்டளை மேட்டுவாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில்  இருந்து பிரிந்து கரூர், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் சுமார் 80,714 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறும் வகையிலும், அதேபோல, மாயனூர் தடுப்பணையின் இடதுபுறம் திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் ஸ்ரீராமசமுத்திரம் கிராமத்தில் வடகரை வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் 10,400 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வகையிலும் தண்ணீர் செல்கிறது. இந்த வாய்க்கால்களில் உள்ள பழைய பாலங்களுக்கு அருகிலேயே புதியதாக பாலங்கள் ரூ. 6.86 கோடியில் அமைக்கும் பணிகள்  தொடர்கிறது. இதில் 7.50 மீ. அகலமுள்ள நான்கு இருவழிப் பாதை பாலங்களும், 3.50மீ. அகலமுள்ள மூன்று ஒருவழிப்பாதை பாலங்களும் அமைக்கும் பணி துரிதமாக நடைபெறுகிறது. இந்தப் பணிகளையும், குளித்தலை வட்டம் மயிலாடி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.            
நிகழ்ச்சியின்போது குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் எம். லியாகத், காவிரி வடிநிலக் கோட்ட செயற் பெறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com