சுடச்சுட

  

  கரூர் நகரக் கூட்டுறவு வங்கியில் தனி நபர் நகைக்கடன் ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு

  By DIN  |   Published on : 15th August 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரூர் நகரக் கூட்டுறவு வங்கியில், தனி நபர் நகை கடன் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இந்த வங்கியின் ஆலோசனைக்கூட்டம் வெங்கமேடு கிளை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு  வங்கித்
  தலைவர் எஸ்.திருவிகா தலைமை வகித்தார். வங்கி மேலாண் இயக்குநர் கே.ரமேஷ் முன்னிலை வகித்தார். பொதுமேலாளர் ஆர்.சேகர் வரவேற்றார்.
    கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில்  விதி 110-ன் கீழ், கரூர் நகரக் கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்ட அனுமதியளித்த  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் வங்கிக்கு வட்டியில்லா கடன் வழங்க பரிந்துரைத்த போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. 
  மேலும் இந்த அறிவிப்பை செயல்படுத்த கூட்டுறவு கல்வி மற்றும் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.40 லட்சம் வட்டியில்லா கடனாக அனுமதி வழங்கிய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், பரிந்துரை செய்த கரூர் சரகத் துணைப்பதிவாளர் ஞா.வ.ஜெயபிரகலாதனுக்கும், கூட்டுறவுச் சங்க அலுவலர்களுக்கும் நன்றி தெரிவிப்பது,  மேலும் வங்கியில் நகைக்கடனாக தனி நபருக்கு இதுவரை உச்சவரம்பாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதை, இனி உயர்த்தி ரூ.20லட்சமாக வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் சி.சுப்ரமணியம், உடையவர்மோகன், ராமமூர்த்தி, கே.ஆர்.குருசாமி, சத்யா ஜி.நவநீதன், தமிழரசிராஜேந்திரன், மல்லிகா மனோகரன் மற்றும் பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai