சுடச்சுட

  

  தமிழ் கலாசாரம் காப்போம் தலைப்பில் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாக கருவூர் திருக்குறள் பேரவைச் செயலர் மேலை.பழநியப்பன் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
  324 ஏ2 அரிமா மாவட்ட ஆளுநர் ஜே.கார்த்திக் பாபுவால், தமிழ் கலாச்சார மேம்பாடு மாவட்டத் தலைவராக நான்  நியமிக்கப்பட்டுள்ளேன்.
   இப்பணியை மேம்படுத்தும் வகையில், தமிழ் கலாசாரம் காப்போம்  என்கிற பொதுத் தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஒழுக்கம் - பண்பாடு - கலைகள் குறித்து பண்டைய இலக்கிய அற நூல்கள் மேற்கோள்களோடு இவற்றை வலியுறுத்தியும், சிறப்பையும் கூறி ஒன்றுக்கு நான்கு அளவில் மூன்று பக்கங்களுக்கு ஒரு வரி கூட மிகாமல் தட்டச்சு செய்து மேலை. பழநியப்பன், மாவட்டத் தலைவர், தமிழ் கலாசார மேம்பாடு, 72. சீனிவாசபுரம், கரூர் - 639001 என்ற முகவரிக்கு புகைப்படம், சரியான முகவரி செல்லிடப்பேசி எண் இவற்றையும் இணைத்து வருகிற 30-ஆம்தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.  
  20 கட்டுரைகள்நூலில் இடம்பெறும். ஐந்து கட்டுரையாளர்கள் ஆளுநர் கார்த்திக் பாபுவால் அக்டோபரில் நடைபெறும் நிகழ்வில் பாராட்டுப் பெறுவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai