சுதந்திர தினம் :ராணுவ வீரர்களுக்கு  1 லட்சம் ராக்கி கயிறுகள்:  கரூர் பரணிபார்க் பள்ளி வழங்கியது

கரூர் பரணிபார்க் பள்ளி சார்பில், சுதந்திர தினப் பரிசாக ராணுவ வீரர்களுக்கு 1 லட்சம் ராக்கி கயிறுகள்  வழங்கப்பட்டன.

கரூர் பரணிபார்க் பள்ளி சார்பில், சுதந்திர தினப் பரிசாக ராணுவ வீரர்களுக்கு 1 லட்சம் ராக்கி கயிறுகள்  வழங்கப்பட்டன.
 ஆண்டுதோறும் கரூர் பரணி பார்க், வித்யாலயா பள்ளிகளின் சாரண மாணவிகள், தங்கள் சக மாணவர்கள் உதவியுடன் ராக்கி கயிறுகளை தயார் செய்து, ராணுவ வீரர்களுக்கு அனுப்புவது வழக்கம். 
நிகழாண்டு ஒரு லட்சம் ராக்கிகளைத் தயார் செய்து,ராணுவத் தலைமையகத்தில், இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திடம் அண்மையில் நேரில் வழங்கினர். 
தமிழக மாணவிகள் சார்பாக ராணுவத் தலைமை தளபதிக்கு ராக்கி அணிவித்து,  ஒரு லட்சம் ராக்கி கயிறுகளை ஒப்படைத்து திரும்பிய பரணி வித்யாலயா பள்ளி சாரணிய மாணவியும், குடியரசுத் தலைவர் உயர் விருது பெற்றவருமான சுவேதா காயத்ரி கூறியது: தமிழ் ஆர்வலரும், முன்னாள் எம்.பி.யுமான  தருண் விஜய் ராணுவ வீரர்களுக்காக நாடு முழுவதும் இருந்து ராக்கி கயிறுகளைச் சேகரித்து அனுப்பி வருகிறார் என்பதை சமூக ஊடகங்கள் மூலமாக அறிந்தோம். 
உடனடியாக 2017-இல்  பரணி பள்ளிகளின் சாரண, மாணவிகள் இணைந்து 15,000 ராக்கி கயிறுகள், 2018- இல் 16,000 ராக்கி கயிறுகள் தயார் செய்து பள்ளி ஆசிரியர்கள் துணையுடன் 'ராக்கிஸ் பார் சோல்ஜர்ஸ்' அமைப்பின் தலைவர் தருண் விஜய் மூலமாக ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பினோம். 
 இந்தஆண்டும், இதை மேலும் விரிவு செய்ய முடிவு செய்து, ஒரு லட்சம் ராக்கி  கயிறுகளை தயார் செய்து அனுப்பியுள்ளோம். 
தொடர்ந்து ராணுவத் தலைமை தளபதிக்கு அணிவித்தோம் என்றார் அவர்.இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் மோகனரங்கன் கூறுகையில், ராணுவ வீரர்களுக்கு ராக்கி அனுப்ப வேண்டும் என்று இரு ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகள் எங்களிடம் தெரிவித்த போது மிகவும் மகிழ்ந்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம்.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ வீரர்களுக்காக பதினைந்து ஆயிரம் ராக்கிகளில் தொடங்கிய பயணம், இந்த மூன்றாவது ஆண்டில் 'சூழல் நட்பு விதை ராக்கி'  மற்றும் 'ஒரு லட்சம் ராக்கி' என்று பிரம்மாண்டமாக விரிவடைந்து நம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
 மாணவிகளின் தேசப்பக்திக்கு ஆதரவு தரும் விதமாக தருண் விஜய் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பள்ளிக்கு நேரில் வந்து, சாரணர் மாணவிகளிடம் ராக்கிகளைப் பெற்று பாராட்டி வாழ்த்தினார்கள். 
மேலும் தருண் விஜய் ஏற்பாட்டில்  'ஏர் இந்தியா' விமான நிறுவனம் தனது அதிகாரிகளை பள்ளிக்கே நேரில் அனுப்பி ராக்கிகளை பெற்று விமானம் மூலம் இலவசமாக புது தில்லி ராணுவத் தலைமையகத்திற்கு சென்று சேர்த்தது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com