நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 22nd August 2019 09:54 AM | Last Updated : 22nd August 2019 09:54 AM | அ+அ அ- |

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாட்டில் பெருகிவரும் சாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடுகளை எதிர்க்கும் வகையிலும், வன்முறையில் ஈடுபடாமல், மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபட வேண்டி டிஎன்பிஎல் ஆலையில் செவ்வாய்க்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டிஎன்பிஎல் ஆலையின் முதன்மை பொதுமேலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் முதன்மை பொது மேலாளர்கள்(மனிதவளம்)பட்டாபிராமன், தங்கராஜூ(உற்பத்தி), பொது மேலாளர் விஜயகுமார் மற்றும் ஆலை பணியாளர்கள் பங்கேற்றனர்.