Enable Javscript for better performance
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸார் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததைக் கண்டித்து கரூரில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இதனிடையே மாவட்ட தலைவர் சின்னசாமி உள்பட 55 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai