Enable Javscript for better performance
"தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு அவசியம்'- Dinamani

சுடச்சுட

    

    இயற்கை அழிவை தடுக்க வேண்டுமெனில், தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ்.
    கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சார்பில் தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிற்பகலில் நடைபெற்ற மாநாட்டில் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ச.சூரியபிரகாஷ் பேசியது: 
    இந்த பூமியானது 71 சதவீத நீர் பரப்பையும், 29 சதவீத நிலப்பரப்பையும் கொண்டதாக இருக்கிறது. இதில் 96.5 சதவீதம் உப்பு நீரும், 3.5 சதவீதம் நன்னீரும் உள்ளது. இந்த 3.5 சதவீத நன்னீரையும் அமேசான் போன்ற காடுகள்தான் தருகின்றன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உலகத்தில் 7 பில்லியன் மக்கள் தொகை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1.2 பில்லியன் மக்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். 
    உலகளவில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப நன்னீர் கிடைப்பதன் சதவீதம் சுருங்கிக்கொண்டே போகிறது. காடுகள் அழிப்பு, தொழிற்சாலைகளின் கழிவுகள் வெளியேற்றத்தால் நிலம், நீர், காற்று மாசடைதல் போன்ற பல்வேறு காரணங்களால் இயற்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  ஒருபுறம் உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி இயற்கை சீற்றத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால் உலகத்தில் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகிவிடும். 
    இயற்கை கொடுத்த நிலம், நீர், காற்று மாசடைவதற்கு தொழில்துறைகளும் ஒரு காரணமாக அமைகின்றன. தொழிற்சாலைகளில நீர்சிக்கனம் என்பதை கடைப்பிடித்து, தொழில்நுட்பம் மூலம் கழிவு நீர் வெளியேற்றத்தை தடை செய்து, மழைநீர் சேமிப்பு பழக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே இயற்கையின் அழிவை நாம் தடுக்க முடியும் என்றார். 
    மாநாட்டில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள், சாய, சலவை பட்டறை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai