Enable Javscript for better performance
பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: கரூரில் வாகனச் சோதனை தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை: கரூரில் வாகனச் சோதனை தீவிரம்

    By DIN  |   Published on : 24th August 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து கரூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியரஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது.
    கோவை வழியாக தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரூர் மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரூரில் ரயில் நிலையங்கள், பேருந்துநிலையங்கள், ஜவஹர் பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் மாறுவேடங்களில்  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் தலைமையில் கரூரில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் வளைவுப்பகுதியில் மாலையில் தீவிர வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியான வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டன. மேலும் வாகனங்களில் வருவோர் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை செய்த பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தந்த காவல்நிலையங்களின் எல்லைகளுக்கு உள்பட்ட சோதனைச்சாவடிகளிலும்  வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்றன.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai