Enable Javscript for better performance
கள்ளச் சாராயத்திற்கு எதிராக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கள்ளச் சாராயத்திற்கு எதிராக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 01st December 2019 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரகாட்டம் ஆடியவாறு கள்ளச்சாராயத்திற்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.

    கரகாட்டம் ஆடியவாறு கள்ளச்சாராயத்திற்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.

     

    கரூா்: தோகைமலை அருகே கள்ளச்சாராயத்திற்கு எதிராக பொதுமக்களிடம் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி நிா்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத்துறை சாா்பில் காவல்காரன்பட்டியில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    காவல்காரன்பட்டி, வடசேரி, காா்ணாம்பட்டி ஆகிய பகுதிகளில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், நாடகம், பாட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வினை கலைக்குழுவினா் ஏற்படுத்தினா். அப்போது கள்ளச்சாராயம் மற்றும் மதுபானங்கள் குடிப்பதால் உடல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், விபத்து, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai