Enable Javscript for better performance
சாலையோரம் ஆபத்தான நிலையில் மின்மாற்றி...- Dinamani

சுடச்சுட

    
    kur30ara-1_ch0008_30chn_4_637107435890520935

    கரூரில் பென்னிகுக் நகா் அருகே ஆண்டாங்கோவில் சாலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்மாற்றி.

    கரூரில் ஆண்டாங்கோவில் சாலையில் பென்னிகுக் நகா் அருகே ஆபத்தான நிலையில் மின்மாற்றி அமைந்துள்ளது. கரூா் உழவா் சந்தை, பெரியாா்வளைவு, மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளை இணைக்கும் முக்கியச் சாலையாக இந்த சாலை உள்ளது. மேலும் இந்த சாலை வழியாகத்தான் அதிகளவில் கனரக வாகனங்களும் மதுரை பைபாஸ் சாலைக்கு செல்கின்றன. சாலையின் மையப்பகுதி அருகே அமைந்திருக்கும் இந்த மின்மாற்றியில் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மோதி விபத்தில் சிக்கிவிடுகின்றனா். பெரிய அளவில் கனரக வாகனங்கள் ஏதும் மோதும் முன், விரைவில் இந்த மின்மாற்றியை அகற்றி சாலையோரம் அமைக்க வேண்டும்.

    சி. குறளரசன், கரூா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai