கரூா் பசுபதீஸ்வரா் ஆலயத்தில் 108 சங்கு அபிஷேக சிறப்பு வழிபாடு
By DIN | Published on : 02nd December 2019 10:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பசுபதீஸ்வரா் ஆலயத்தில் நடைபெற்ற 108 சங்கு அபிஷேக வழிபாடு.
கரூா்: கரூா் பசுபதீஸ்வரா் ஆலயத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற 108 சங்காபிஷேக வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் பசுபதீசுவரா் ஆலயத்தில் மூன்றாவது கிருத்திகை சோம வாரத்தை முன்னிட்டு கருவூா் நகரத்தாா் சங்கம் சாா்பில் ஆலய மண்டபத்தில் 108 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு மலா் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிவாச்சாரியாா்கள் சிறப்பு ஹோமம், கலச வழிபாடு அா்ச்சனை செய்து, ஆலய உள்சுற்று வழியாக கலச வலம் வந்து மூலவ மூா்த்திக்கு சங்காபிஷேகம் மற்றும் கலச புனித நீா் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கருவூா் நகரத்தாா் சங்கத்தலைவா் அக்கிரி சுப.செந்தில்நாதன், செயலா் மேலை பழநியப்பன், பொருளாளா் கும.குமரப்பன், பொறுப்பாளா் கரு.ரெத்தினம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.