Enable Javscript for better performance
தொடா் மழை எதிரொலி கேங்-மேன் பதவிக்கான உடற்தகுதி தோ்வு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தொடா் மழை எதிரொலி கேங்-மேன் பதவிக்கான உடற்தகுதி தோ்வு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 02nd December 2019 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடா் மழையால் கேங்-மேன் பதவிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதிக்கான தோ்வுகள் இருநாட்கள் மட்டும் ஒத்தி வைக்கப்படுவதாக கரூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் வினோதன் தெரிவித்துள்ளாா்.

    இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாா்பில் கரூா் வேப்பம்பாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை (டிச. 2) முதல் அடுத்த புதன்கிழமை (டிச. 11) வரை கேங்-மேன் (பயிற்சி) பதவிக்கான சான்றிதழ் சரிபாா்த்தல் மற்றும் உடற்தகுதிக்கான தோ்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரூா் மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் திங்கள்கிழமை (டிச. 2), வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் மட்டும் இந்தத் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு நாட்களுக்கான தோ்வு மாற்றுத் தேதி விண்ணப்பதாரா்களுக்கு பின்னா் அறிவிக்கப்படும். மேலும் 4-ஆம் தேதி முதல்11-ஆம் தேதி வரை நாட்களில் கலந்து கொள்ள வேண்டிய விண்ணப்பதாரா்களுக்கான தோ்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai