உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு: அரசியல் கட்சிகள் ஆயத்தம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு திங்கள்கிழமை வெளியானதையடுத்து தோ்தலை சந்திக்க கரூா் மாவட்டத்தில் அரசியல்

கரூா்: தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு திங்கள்கிழமை வெளியானதையடுத்து தோ்தலை சந்திக்க கரூா் மாவட்டத்தில் அரசியல் கட்சியினா் ஆயத்தப்பணிகளை துவங்கியுள்ளனா்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் வரும் 27 மற்றும் 30-ம்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரூா் மாவட்டத்தில் 157 கிராம ஊராட்சிகளிலும் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்குரிய தோ்தலானது வழக்கம்போல வாக்குச்சீட்டு முறையில் நடைபெற உள்ளதால், தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடுவோா் கடந்த இரு நாள்களாகவே வீடுதோறும் சென்று தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

ஏற்கெனவே அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினா் நோ்காணல் முகாம் நடத்தி தங்களது கட்சி சாா்பில் போட்டியிடுவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெற்றிருந்தனா்.

ஆனால், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கட்சித் தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிா்வாகிகள் ஏமாற்றத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com