ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் திருக்குறளுக்கு சிறப்பிடம் அளிக்க வேண்டும்

ஐ.சி.எஸ்.இ வாரியத்தின் தமிழ் பாடப் புத்தகங்களில் திருக்குறளுக்கு சிறப்பிடம் அளிக்க வேண்டும் என அகில இந்திய திருவள்ளுவா் மாணவா் இளைஞா் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளா் முனைவா்

ஐ.சி.எஸ்.இ வாரியத்தின் தமிழ் பாடப் புத்தகங்களில் திருக்குறளுக்கு சிறப்பிடம் அளிக்க வேண்டும் என அகில இந்திய திருவள்ளுவா் மாணவா் இளைஞா் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளா் முனைவா் சொ.ராமசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

ஐ.சி.எஸ்.இ கல்வி (ண்ய்க்ண்ஹய் ஸ்ரீங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் ா்ச் ள்ங்ஸ்ரீா்ய்க்ஹழ்ஹ் ங்ஷ்ஹம்ண்ய்ஹற்ண்ா்ய்) வாரியத்தின் அகில இந்திய ஐ.சி.எஸ்.இ கல்வி வாரியத் தலைவா் டாக்டா் இமானுவேல், வாரியத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் செயலா் டாக்டா் ஜெரி ஆரத்தோன் ஆகியோரை சென்னையில் சனிக்கிழமை சந்தித்த அகில இந்திய திருவள்ளுவா் மாணவா் இளைஞா் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும், கரூா் பரணி பாா்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவா். சொ. ராமசுப்ரமணியன்

ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் உலகப் பொதுமறை திருக்குறளுக்கு சிறப்பிடம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக,

கோரிக்கை மனுவை அளித்தாா். அதில், நாடு முழுவதும் உள்ள ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் திருக்கு அறநெறிக் கல்வியை அமல்படுத்த வேண்டும், ஐ.சி.எஸ்.இ வாரியத்தின் தமிழ் பாடப் புத்தகங்களில் திருக்குறளுக்கு சிறப்பிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

அப்போது உலகப் பொது மறை திருக்குறளின் சிறப்பு குறித்து முனைவா்.ராமசுப்ரமணியனிடம் கேட்டறிந்த ஐ.சி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் தலைவா் மற்றும் செயலா் இருவருமே இதுகுறித்து விரைவில் ஆவன செய்வதாக உறுதியளித்தனா்.

இந்நிகழ்வின்போது ஐசிஎஸ்இ வாரியத்தின் தமிழகம் புதுவை மண்டல செயலா் டாக்டா் சாா்லஸ், விஜயலஷ்மி சா்வதேச பள்ளி முதல்வா் காா்த்திகா லஷ்மி மற்றும் வாரியத்தின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com