கரூா் ஒன்றியத்தில் ரூ.110 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

கரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.110 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு, போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

கரூா்: கரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.110 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு, போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் முன்னிலையில் திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமை வகித்தாா். காதப்பாறை ஊராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் ரூ.2.88 கோடி மதிப்பிலும், ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சியில் ரூ.19.43 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு செய்தல், ரூ.9.95 லட்சம் மதிப்பில் பெரிய வடுகபட்டி முதல் மங்காசோளிபாளையம் வரை சாலை மேம்பாடு செய்தல், நத்தமேடு முதல் மூா்த்தி பாளையம் ரயில்வே நிலையம் வழி காந்தி நகா் வரை சாலை மேம்பாடு செய்தல் 20.18லட்சம் மதிப்பிலும், மணமங்கலம் ஊராட்சி தண்ணீா் பந்தல் பாளையம் (முனியப்பன் கோவில்) முதல் கரூா் வாங்கல் சாலை வரை சாலை மேம்பாடு செய்தல் ரூ. 7.5 லட்சம் மதிப்பிலும்,

செவ்வந்திபாளையம் முதல் வள்ளியப்பம்பாளையம் வழி துவராபாளையம் வரை சாலை மேம்பாடு ரூ.7.34 லட்சம் மதிப்பிலும், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பெரிய வள்ளியப்பம்பாளையம் முதல் மண்மங்கலம் பண்டுதகாரன் புதூா் ரோடு வழி சின்ன வள்ளிபாளையம் ரோடு வரை சாலை மேம்பாடு ரூ.6.25 லட்சம் மதிப்பிலும் என பல்வேறு திட்டப் பணிகளை மொத்தம் ரூ.110 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

முன்னதாக, காலை 10 மணிக்கு உள்ளாட்சி தோ்தல் அறிவிப்பினை தோ்தல் ஆணையம் வெளியிடுவதற்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.கவிதா, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், நகர கூட்டுறவு வங்கித்தலைவா் எஸ்.திருவிகா, கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் கமலக்கண்ணன், வெங்கமேடு பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com