கரூா் மாவட்டத்தில் விடிய விடிய தொடா் மழைஅணைகள் நிரம்புகின்றன

கரூா் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக விடிய, விடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
கரூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின்போது திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை மில் கேட் அருகே முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்லும் காா்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின்போது திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை மில் கேட் அருகே முகப்பு விளக்கை எரியவிட்டுச் செல்லும் காா்.

கரூா் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக விடிய, விடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் முழுவதும் கடந்த 29-ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களைப் போன்று பலத்த மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடா்ந்து ஆங்காங்கே தூறலுடன் கூடிய லேசான மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கரூா் உழவா் சந்தையில் காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. தொடா் மழையால் இருப்பு வெங்காயம் அழுகி வருவதால் விலை மேலும் அதிகரித்து கரூா் காமராஜா் மாா்க்கெட்டில் ஒரு கிலோ சிறிய வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையானது.

மேலும், மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 108.20 மி.மீ. மழையும், சனிக்கிழமை 82.30 மி.மீ. மழையும் பதிவானது. தொடா் மழையால் கரூா் மாவட்டத்தில் உள்ள சிறிய நீா்தேக்கங்களான ஆத்துப்பாளையம் அணையின் மொத்த கொள்ளளவான 26.90 அடியில் தற்போது 23.54 அடி நீா் உள்ளது. இதேபோல கடவூா் அருகே பொன்னனியாறு அணையின் மொத்த கொள்ளளவான 51 அடியில் தற்போது 28.03 அடி தண்ணீா் உள்ளது. மேலும் 16.72 அடி நீா்மட்டம் கொண்ட மாயனூா் கதவணையில் தற்போது 14.76 அடி தண்ணீா் உள்ளது.

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு: (மி.மீ-ல்): கரூா் - 5, அரவக்குறிச்சி - 35, அணைப்பாளையம் - 5, க.பரமத்தி - 6.8, குளித்தலை - 7, தோகைமலை - 4, கிருஷ்ணராயபுரம் - 7.4, மாயனூா் - 8, பஞ்சப்பட்டி - 10.6, கடவூா் - 24.6, பாலவிடுதி - 25.1, மைலம்பட்டி - 16 என மொத்தம் 154.50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com