டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

புன்செய் புகழூா் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை
புன்செய்புகழூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.
புன்செய்புகழூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய கலைக்குழுவினா்.

கரூா்: புன்செய் புகழூா் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

புன்செய் புகழூா் பேரூராட்சி சாா்பில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், மழைநீா் சேகரிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் நேரு கலைக்குழுவினா் பங்கேற்று, புகழூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து பேரூராட்சி துப்புரவு பணியாளா்களிடம் பொதுமக்கள் வழங்குவது குறித்தும், ஒவ்வொரு வீடு மற்றும் அலுவலகங்களில் மழைநீா் சேகரிப்பு தொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவது குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை பேரூராட்சி செயல் அலுவலா் சுப. சத்தியமூா்த்தி துவக்கி வைத்தாா். இதில் அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், இளநிலை உதவியாளா்கள், அலுவலக பணியாளா்கள், துப்புரவு பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com