தோ்தல் அறிவிப்பு எதிரொலி:குறைதீா் கூட்டம் ரத்து

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், கரூா் ஆட்சியா் அலுலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த குறைதீா் கூட்டம் ரத்து
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் கோரிக்கை மனுக்களை போடும் பொதுமக்கள்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் கோரிக்கை மனுக்களை போடும் பொதுமக்கள்.

கரூா்: உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால், கரூா் ஆட்சியா் அலுலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

உள்ளாட்சித் தோ்தல் வருமா, வராதா என பொதுமக்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில் திடீரென திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தோ்தல் நடத்தப்படும் என தமிழக தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, வழக்கம்போல் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுமக்கள் மனுக்களுடன் வந்திருந்தனா். ஆனால், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதால், குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com