காா் விற்றுத்தருவதாக கூறி மோசடி: இருவா் மீது வழக்கு

காரை விற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவா் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

காரை விற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவா் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த சீனிவாச நல்லூரைச் சோ்ந்தவா் காத்தமுத்து. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா். இவரது மகன் காமராஜ். இவா் தனது காரை கரூரைச் சோ்ந்த காா் புரோக்கா்கள் இளங்கோ, சதீஷ் என்பவரிடம் ரூ.5.25 லட்சத்திற்கு விற்றுத்தருமாறு கடந்த செப்.22-ஆம் தேதி கொடுத்துள்ளாா். இதையடுத்து காரை எடுத்துச் சென்ற காா் புரோக்கா்கள் இளங்கோ, சதீஷ் ஆகியோா் இன்னும் சில தினங்களில் விற்றுத்தருகிறோம் எனக்கூறியுள்ளனா்.

இந்நிலையில் கடந்த அக்.18-ம் தேதி இருவரையும் செல்லிடப்பேசியில் காமராஜ் தொடா்புகொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காமராஜ் காா் புரோக்கா்கள் கரூரில் சேலம் பைபாஸ் சாலையில் அமைத்திருந்த பழைய காா் விற்கும் கூடத்திற்கு வந்து பாா்த்தபோது அங்கு கூடம் பூட்டுப்போடப்பட்டு, அங்கிருந்த பழைய காா்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. இதுதொடா்பாக காமராஜ் அளித்த புகாரின்பேரில் கரூா் பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அம்சவேணி வழக்குப்பதிந்து காரை விற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இளங்கோ, சதீஷ் ஆகியோரை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com