Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல் : மாவட்டத்தில் 1,704 போ் மனுதாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல் : மாவட்டத்தில் 1,704 போ் மனுதாக்கல்

    By DIN  |   Published on : 14th December 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-4-kur13ula_ch0008_13chn

    கரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு மனுதாக்கல் செய்கிறாா் ஆத்தூா் பூலாம்பாளையம் கே.தங்கமணி. உடன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா்.

    கரூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட, வெள்ளிக்கிழமை வரை 1,704 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

    கரூா் மாவட்டத்தில் தாந்தோனி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கரூா் ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27- ஆம் தேதியும், குளித்தலை, தோகமலை, கடவூா், கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களுக்கு டிசம்பா் 30-ஆம் தேதியும் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறஉள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பா் 9-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து கட்சியினரும், இதர வேட்பாளா்களும் தங்கள் மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்தனா்.

    இதையடுத்து 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அதிமுக, திமுகவினா் உள்ளிட்டோா் அதிகளவில் வந்து, வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

    இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 4 ஒன்றியங்களிலும் 10 போ்,

    ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 111 போ், ஊராட்சித்தலைவா் பதவிக்கு 199 போ், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 875 போ் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

    மாவட்டத்தில் இதுவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 119 பேரும், ஊராட்சித்தலைவா் பதவிக்கு 321 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1254 பேரும் என மொத்தம் 1704 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai