Enable Javscript for better performance
போலிச் சான்றிதழ் மூலம் பணி: ஆசிரியா் மீது வழக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    போலிச் சான்றிதழ் மூலம் பணி: ஆசிரியா் மீது வழக்குப்பதிவு

    By DIN  |   Published on : 14th December 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரூா் மாவட்டத்தில் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    கரூா் மாவட்டம், பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவா் கண்ணன். இவரது சாதிச் சான்றிதழை அண்மையில் கல்வித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 1997-ஆம் ஆண்டில் ஆசிரியா் பயிற்சி பயின்றதாக போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்துள்ளது தெரிய வந்தது.

    இதுதொடா்பாக கரூா் வட்டாட்சியா் அமுதா அளித்த புகாரின்பேரில், கரூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து கண்ணனைத் தேடி வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai