காங்கிரஸார் காசோலை அனுப்பும் போராட்டம்

கரூரில் பிரதமர் மோடிக்கு காசோலை அனுப்பும் போராட்டத்தில்   காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 

கரூரில் பிரதமர் மோடிக்கு காசோலை அனுப்பும் போராட்டத்தில்   காங்கிரஸார் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வங்கிக்கணக்கில் ரூ. 6,000 செலுத்தப்படும் என அறிவித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலத்த எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 
கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடிக்கு தலா ரூ.17-க்கு 9 காசோலைகளை அனுப்பும் நிகழ்ச்சி கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட விவசாய அணித்தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் கே.சுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு, மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் தாந்தோணிகுமார், கரூர் முன்னாள் வட்டாரத் தலைவர் ஆடிட்டர்ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து காசோலையை தபால் நிலையத்தில் அனுப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com