சுடச்சுட

  

  கிருஷ்ணராயபுரம் அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்து தேங்காய்களைத் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (60). இவருக்கு செக்கானம் பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது.
  இந்த நிலையில், இவரது தோப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த பிச்சம்பட்டியைச் சேர்ந்த வேம்புக்கண்ணன்(42), ரமேஷ்(40)  தேங்காய்களைத் திருடியுள்ளனர். தோப்புக்குள் சப்தம் கேட்டு அங்கு வந்த மாணிக்கம், அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  இருவரையும் பிடித்து மாயனூர் போலீஸில் ஒப்படைத்தார்.
  இதைத் தொடர்ந்து  போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai