சுடச்சுட

  

  கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மொபெட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 4 வயது சிறுவன்  உயிரிழந்தார்.
  கடவூரை அடுத்த மதகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மொபெட்டில்  மனைவி அம்சவள்ளி (32), மகன் கதிர்வேல் (4), மகள் கோமதி (7) ஆகியோருடன் திருச்சி- பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  கோதூர் பஜார் பகுதியில் சென்ற போது எதிரே வந்த டேங்கர் லாரி மொபெட் மீது மோதியது.  இதில் சிறுவன் கதிர்வேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  அம்சவள்ளி, கோமதி பலத்த காயங்களுடன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் செந்திலைத் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai