காரைக்கால் விரைவு ரயில் கழிவறையில் ஆண் சடலம்

எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயில் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் சடலம் கரூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. 

எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயில் கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஆண் சடலம் கரூர் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. 
எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில், திருப்பூர் வந்த போது முன்பதிவில்லா பெட்டிப் பகுதியிலுள்ள  கழிவறைக்கு சிறுநீர் கழிக்க சிலர் சென்றனர். இரண்டில் ஒரு கழிவறையைத் திறக்க முடியவில்லை.  இதனால் அதிருப்தியடைந்த பயணிகள், ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் ரயில் புறப்பட்டது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கரூர் ரயில் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த ரயில் காலை 6.30 மணிக்கு கரூர் ரயில் நிலையம் வந்த போது,  போலீஸார் கழிவறையைத் திறக்க முயன்றும் பயனில்லை. பின்னர் பெட்டியின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் வேட்டியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தொழில்நுட்பப் பணியாளர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. 
இறந்தவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. கழிவறையில் இருந்த சடலம் மீட்பதற்கு நேரம் ஆனதால், காலை 6.35 மணிக்குப் 
புறப்பட வேண்டிய ரயில், காலை 7.25 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com